சன் டிவியில் ஒளிப்பரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஐதராபாத்தில் பிறந்த அவர், குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர்.
தெலுங்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'அந்தரி பந்துவயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரே,. சம்திங் சம்திங், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால் 'ரோஜா' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். முதல் சீரியலே பிரியங்காவிற்கு நல்ல ஓபனிங் கொடுக்க, தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் 'சீதாராமன்' சீரியலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் வைத்து பிரியங்கா நல்காரி ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் தங்களது திருமணம் ரகசியமானது அல்ல என்று பிரியங்கா நல்காரி விளக்கமளித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், எங்கள் வீட்டின் ஒப்புதலோடு தான் திருமணம் செய்துக் கொண்டுள்ளோம்.
ராகுல் வீட்டில் எங்களை ஏற்காத நிலையில், எங்களை ஏற்றுக் கொண்டவுடன் திருமண நிகழ்வை இருவரும் கொண்டாடுவோம். எங்களது திருமணத்தை ரகசிய திருமணம் என்று கூறுவதை மீடியாக்கள் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என்று அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராகுலுக்கும், பிரியங்காவிற்கு கடந்த 2018-ஆம் ஆண்டே நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் தங்களது பணிகளில் பிசியாக இருந்ததால் திருமணம் குறித்து யோசிக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் இருவருக்குள்ளும் கருத்து மோதல் இருந்த நிலையில் தற்போது அது சரியாகி திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.