நீதிமன்ற கூண்டில் ஈஸ்வரி.. அதிர்ச்சி கொடுத்த அமலா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

6 months ago 55

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரியை விசாரணை செய்ய ஈஸ்வரி எனக்கு ராதிகாவை பிடிக்காது தான் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தான்.

ஆனா நான் குழந்தையை கொன்ற அளவுக்கு கொடூரமானவ கிடையாது நான் எதுவும் செய்யல என்று சொல்லி அதை போலிஸ் லத்தியை காட்டி ஒழுங்கு மரியாதையா உண்மையை ஒத்துக்கோங்க என்று மிரட்டுகின்றனர். 

ராமமூர்த்தி உடைந்து போவதாக பாக்யா அத்தை நிச்சயமா இதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க நாளைக்கு அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வந்துருவாங்க அழாதீங்க மாமா என்று ஆறுதல் சொல்கிறார்.

அடுத்த நாள் காலையில் ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். முதல் வழக்காக ஈஸ்வரி கேஸ் விசாரணைக்கு வருகிறது. ஈஸ்வரி கோபி, ராதிகா கல்யாணத்தில் விருப்பமில்லாமல் இருந்தது.. குழந்தையை கலைக்க சொன்னது எல்லாவற்றையும் வைத்து நீங்கதான் ராதிகாவை தள்ளிவிட்டு குழந்தையை கலைச்சீங்களா என்று கேட்க ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல என்று சொல்கிறார். 

அதன் பிறகு ராதிகா மற்றும் கமலா என ஒவ்வொருத்தராக கூண்டில் நேற்று விசாரிக்க ராதிகா இவங்க தான் என்ன தள்ளி விட்டாங்க என்று அதிர்ச்சி கொடுக்க கமலா இவங்க பிடித்து தள்ளுனத நான் என் இரண்டு கண்ணால பார்த்தேன் என்று சாட்சி சொல்லி ஷாக் கொடுக்கிறார். 

அடுத்ததாக பாக்யாவை கூண்டில் ஏற்றி விவாகரத்து ஆன பிறகு வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று கேட்க விவாகரத்து ஆனது மற்ற எல்லா உறவும் முடிஞ்சு போயிடாதுல என்று பதில் சொல்ல மாமியார் ராதிகாவை பிடிச்சு தள்ளி இருப்பாங்களா என்று கேட்க நிச்சயமா இல்ல அத்தை அப்படி பண்ணவே மாட்டாங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...