பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. ஷாக்கில் சின்னத்திரை ரசிகர்கள்

1 year ago 447

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த ஹரி என்ற நடிகர் தற்கொலை செய்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி-யில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கல்லூரி கதை அம்சத்துடன் இருப்பதால், இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்ணிலா - சூர்யா காதல் காட்சிகள் இணையத்தில் பயங்கர ஹிட்.


காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் தோழனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி. சென்னையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சின்னத்திரை வட்டாரத்தில் ஹரியின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...