ஃபரீனாவை அடுத்து மற்றொரு விஜய் டிவி பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..!

3 years ago 458

ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. பின்னர்நடனக் கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். 


இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.


ஐஸ்வர்யா சன் குடும்பம் விருதுகள், அமுல் சூப்பர் குடும்பம் மற்றும் இசை திறமை ரியாலிட்டி ஷோ சன் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியவர்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ என்ற புராணத் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்திலும் நடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியிலும் சில தொடர்கள் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி அசத்தினார்.


பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு அங்கே செட்டில் ஆனார்.


திருமணத்திற்கு பின் அவ்வப்போது சோசியல் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களையும், தன்னுடைய pregnancy புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இவருக்கு நவம்பர் 7 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு கல்கி பிரயா என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இவரது இந்த பதிவை பார்த்து, ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் இரண்டு விஜய் டிவி பிரபலங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் ஆன நிலையில், இரண்டு விஜய் டிவி பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...