அஜித் விஜய் லெவலுக்கு... மகிழ்ச்சியின் உச்சத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..!

3 years ago 351

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளை கதாநாயகனாக வைத்து இயக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த படத்தின் பட்ஜெட் 30 கோடி என்றும் சொல்லப்பட்டது.

ஜேடி – ஜெர்ரி இருவரும் ஏற்கனவே அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். 


இந்த படத்தில் நடிகையாக கீதிகா திவாரி நடிக்கிறார். இது கீதிகா திவாரிக்கு முதல் படம். படத்தில் மேலும் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா போன்றோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் சண்டை காட்சிகளை அனலரசு இயக்கியுள்ளார். காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் இதே போல் இன்னொரு காட்சியும் வைக்க வேண்டும் எனவும் அருள் அன்லரசுவை கேட்டு கொண்டாராம். மேலும் அனலரசுவின் இந்த காட்சியை புகழ்ந்து தள்ளினாராம்.

மேலும் படத்தில் பாடல் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ள அருள் நடிக்க வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால் படம் வந்திருக்கும் லெவலை பார்த்தால் அஜித் விஜய் ரேஞ்சிற்கு உயர முடியும் என நம்பிக்கை வந்திருக்கிறது. 

இனி இதே போன்ற கதைகள் தான் தனக்கு வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் படத்தில் ப்ரோமோஷன் எல்லாம் வேற லெவலில் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம். எவ்வளவு நெகடிவ் கருத்துக்கள் வந்தாலும் தான் கொண்ட பிடியில் மன உறுதியுடன் சென்று கொண்டிருக்கிறார் அருள் அண்ணாச்சி.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...