அஜித் ஷாலினி திருமணம் தள்ளி போனதற்கு இந்த படம் காரணமா?

2 years ago 634

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தங்களது திருமணத்தில் ஏற்பட்ட தொடர் பிரச்சனைகள் குறித்து இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது அஜித்தும் ஷாலினியும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என ஷாலினி முடிவு செய்துவிட்டார். திருமணத்திற்கு முன்னதாக தான் நடிக்க வேண்டிய படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என முடிவு செய்திருந்தார்.

அப்படி இவர் கமிட் ஆகியிருந்த படங்களில் ஒன்றுதான் பிரியாத வரம் வேண்டும். இந்த படத்திற்காக மூன்று நாள் மட்டும் இவர் நடிக்க வேண்டிய ஷூட்டிங் பாக்கி இருந்தது. ஆனால் பிரசாந்த் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

இந்த ஷூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த காரணத்தினால் சாலினி மூன்று முறை திருமண தேதியை மாற்றி வைத்தார். ஆனாலும் ஷூட்டிங் முடிவடையாத காரணத்தினால் பொறுமை இழந்த ஷாலினி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து பின்னர் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் பிரியாத வரம் வேண்டும் படம் காரணமாக இவர்களின் திருமணம் தள்ளி தள்ளி சென்று ஏப்ரலில் தான் நடந்தது என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...