அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3 years ago 322

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.

அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா, நடிக்க உள்ள அடுத்த 2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க உள்ளார். 

இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதேபோல் மற்றொரு படத்தை இயக்கப்போவது யார்?, அதில் நயன்தாராவுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார்? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...