அடேங்கப்பா.. ரோஜா மீண்டும் சினிமாவிலா? அண்மைய போட்டோவால் சந்தேகம்.!

3 years ago 358

நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ், ரஜினிகாந்த் போன்ற கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் பிரபல நடிகை ரோஜா. 

பின்னர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் பெரிய அளவில் ரோஜா கவனம் செலுத்தவில்லை. சினிமாவில் இருந்து விலகி முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ரோஜா. 

அதே நேரத்தில் அரசியலிலும் பட்டையை கிளப்பி தற்போது சட்டமன்ற உறுப்பினராக ரோஜா இருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொடுக்கப்படவில்லை. சினிமாவில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தாலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார்.


தனது அரசியல் நடவடிக்கைகள், தனக்கு ஏற்படும் நிகழ்வுகள் ஆகியவற்றை அன்றாடம் சமூக வலைதளங்களில் ரோஜா பதிவு செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் திடீரென்று பாவாடை தாவணியில் ஒப்பனை செய்து கொண்டு வெளியே இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மீண்டும் படங்களில் நடிக்க ரோஜா தயாராகி வருகின்றார் என்ற சந்தேகத்தை இந்த போட்டோ ஷூட் ஏற்படுத்தியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...