அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு! இளம் பெண்ணிடம் மெசேஜ் செய்ததை காட்டிகொடுத்த பிரபலம்

3 years ago 452

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து சகித்துகொண்டு படவாய்ப்புகள் பெறுவார்கள். ஆனால், சிலர் அதை ஓப்பனாக தற்போது மீடு மூலம் கூறி அவர்களின் முகத்திரையை கிழித்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் செய்து வாசிப்பாளராக தொலைக்காட்சி சேனலில் இருந்து பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் அனிதா சம்பந்த்.

பிக்பாஸில் பலரின் வெறுப்பை சம்பாதித்தாலும் கடைசி நேரத்தில் மக்கள் மனதை பிடித்தவர். பிக்பாஸ் பிற்கு சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அனிதா படங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நபர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஒரு இளம்பெண்ணை ஒருவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

அந்த பெண் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத்.

புதிய பட வாய்ப்புகள் தருகிறேன் என பல இளம் பெண்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் எனவும், இதுபோன்ற பொய்யான அழைப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமூக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அனிதா சம்பத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...