அட்ஜெஸ்மெண்ட்... முரளியால் தான் எனக்கு பிரச்சினை.. நடிகை ஓபன் டாக்

1 year ago 380

தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய மிகச்சிறந்த நடிகர் முரளி. சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை எடுத்தவர்.

கன்னட உலகில் மிகச்சிறந்த தயாரிப்பாளரான சித்தலிங்கையா என்பவரின் மகன் தான் முரளி. தன்னுடைய மகன் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று அவரது அப்பாவே நினைத்திருக்க மாட்டார். 

அந்த அளவுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். காதல் மன்னன், காதல் இளவரசன் என சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் உண்மையான காதல் மன்னன் இவர் தான்.


காதல் சார்ந்த படங்களில் முரளியின் முக பாவனைகள் அனைவரையும் ஈர்க்கும். இதயம் படத்தில் உருகி உருகி காதலித்து நடிக்கும் காட்சிகள் இப்படி ஒரு காதலன் நமக்கும் கிடைக்க மாட்டானா என பெண்களை ஏங்க வைத்திருப்பார் முரளி. 

முக்கால் வாசி படங்களில் முரளியின் கதாபாத்திரம் கல்லூரி மாணவனாகவே இருந்தது. இந்த நிலையில் முரளி நடித்து வெற்றிப் படமாக அமைந்தது ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம். 

இந்தப் படத்தில் முரளிக்கு ஜோடியாக ராதா என்ற நடிகை நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு கூடுதல் சிறப்பே முரளி வடிவேலு கூட்டணியில் அமைந்திருந்த அந்த காமெடி காட்சிகள் தான்.

அதுவும் தாவுடா தாவு என்ற காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இதனிடையில் அந்த படத்தின் நாயகியான ராதா இப்போது சீரியலில் காலெடி எடுத்து வைத்துள்ளார். அவரிடம் சுந்தரா டிராவல்ஸ் படத்தை பற்றி கேட்கும் போது பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் பயமாகவே இருந்ததும் என்றும் 10ஆம் வகுப்பு முடித்து வந்து நடித்த படம் என்பதால் முரளியை பார்த்து கொஞ்சம் பயந்தேன் என்றும் கூறியிருந்தார். 

மேலும் எதாவது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி யாரும் கேட்டார்களா? என்று கேட்டதற்கு அப்படி எதும் இல்லை, ஆனால் முரளி தான் என்னை ராக்கிங் பண்ணிக் கொண்டே இருந்தார் என்றும் கூறினார்.

‘சூட்டிங் வந்தால் நான் சீனியர் , ஜூனியர் என்ற முறையில் குட் மார்னிங் சொல்லனும்’ என்று முரளி சொல்வார், ஆனால் வடிவேலு தான் தனக்கு ரொம்ப க்ளோஸ் என்று அந்த நடிகை கூறி னார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...