அண்ணாத்த படக்குழுவுக்கு 'குட்-பை'..! சென்னை வந்திறங்கினார் ரஜினிகாந்த்

3 years ago 341

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும அறிவுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார். 

உடல் நிலை சீரான பின்னர், மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு, கடந்த மாதம் சென்னையில் துவங்கியது. கிட்ட தட்ட 15 நாட்கள் சென்னை கோபுரம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த நிலையில், மீதம் உள்ள காட்சிகளை ஹைதராபாத்தில் படம்பிடித்து வருகின்றனர் படக்குழுவினர். 

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தலைவர் படக்குழுவிற்கு குட்பை சொல்லி விட்டு, சற்று முன்னர் சென்னை வந்திருக்கியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், தனி விமானத்தில் ரஜினிகாந்த் சென்னை வந்தார். 


நேற்றே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்தை, பத்திரிகையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படம்பிடித்தனர். அவர்களுக்கு காரில் அமர்ந்தபடி... வணக்கம் தெரிவித்து விட்டு கடந்து சென்றார்.

மேலும் 'அண்ணாத்த' படத்தின், படப்பிடிப்பு தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் நடந்து முடிந்துவிட்டதாகவும், கடைசி கட்ட படப்பிடிப்பு காட்சிகளில் மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சி மட்டுமே படமாக்க உள்ளதாகவும், ரஜினி நடிக்க கூடிய அனைத்து காட்சிகளும் எடுத்து முக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...