அத பார்த்தா ரொம்ப கிக் ஏறுதே.. வில்லங்கமாய் பதிலளித்த நடிகை ரேஷ்மா

2 years ago 582

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மாடல் அழகியாகவும், அதன் பிறகு தொகுப்பாளராகவும் இருந்தவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு முன்னாள் விமானப் பணியாளர் ஆகவும் பணியாற்றினார். 

இவரது தந்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர். மேலும் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினராக அவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தமிழ் திரையுலகில் மேலும் பிரபலமடைந்தார்.

இவர் சன் டிவியில் சன் சிங்கர், வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, வம்சம் போன்ற தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி சின்னத் திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். அதுமட்டுமின்றி தற்போது விஜய் டிவியின் டி ஆர் பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பிச்சு உதறி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவ்வபோது அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ரேஷ்மா, ரசிகர் கேட்ட கேள்விக்கு வில்லத்தனமாக பதில் அளித்துள்ளார்.

அண்மையில் ரேஷ்மா ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் ’உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்து கூறுங்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருந்தார். அதற்குபதிலளித்த ரேஷ்மா, ‘அது வேறு ஒன்றும் இல்லை இரண்டு ரோஜா பூக்கள் தான். அதைப் பார்த்தால் ரொமான்ஸ் அதிகமாகும்’ என்று வில்லங்கமா ஒரு பதிலை கூறியுள்ளார்.

 கிளாமர் கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் இவர், பார்ப்பதற்குத்தான் ரொமான்டிக் நடிகையாக தெரிகிறார் என்றால் அவருடைய பேச்சும் செம கிளாமராக இருக்கிறதே என நெட்டிசன்கள் ரேஷ்மாவின் இந்தப் பதிவை வைத்து கிண்டல் அடிக்கின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...