அதிக சம்பளம் வாங்கும் டாப் - 10 தமிழ் நடிகைகள்

2 years ago 273

பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட் எனப்படும் தமிழ் திரை உலகம் தான் முன்னணியில் உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிப்படங்கள் எல்லாம் தமிழுக்கு கீழ் தான் உள்ளன.

அதனால் தான் மும்பை, மற்றும் ஆந்திரா, கேரளாவை பிறப்பிடமாக கொண்ட நடிகைகள் பலரும் தமிழ் திரை உலகில் கால் ஊன்றினால் எப்படியும் முன்னணி நடிகையாக மாறி பிழைத்துக்கொள்ளலாம் என சென்னைக்கு ஓடோடி வருகிறார்கள். 

இது அந்த காலமான சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி, கே.ஆர். விஜயா தொடங்கி இந்த காலத்தைய நயன்தாரா வரை தொடர்கிறது.

இப்படி வரும் நடிகைகளில் பலர் ஒரு சில படங்களோடு காணாமல் போய்விடுகிறார்கள். அதனால் அவர்கள் வாங்கும் சம்பளமும் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை. 

ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நடிகைகள் மட்டுமே தங்களது சம்பளத்தை கோடிகளில் கரன்சியாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 யார், யார் என்பதை பார்ப்போமா?


நயன்தாரா 

நயன்தாரா தமிழ் திரை உலகில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறந்து வருகிறார். இதனால் அவரை தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் நடிகர் சரத்குமாரின் ஜோடியாக களம் இறங்கிய இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் வரை ஜோடி சேர்ந்து விட்டார். சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை இளம் நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வாடகை தாய் விவகாரத்தில் சிக்கிய பின்னரும் இவரது சம்பளம் குறையவில்லை. தற்போது இவர் இறைவன், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வாங்குகிறார்.

சமந்தா 

நடிகை சமந்தா ஒரு படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். திறமையான நடிப்பினால் தமிழ், தெலுங்கு ரசிகர்களை இன்று வரை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். நாக சைதன்யாவுடனான இவரது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும் திரை உலகில் இன்னும் முன்னணி நடிகையாகவே உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யசோதா திரைப்படம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

திரிஷா 

தமிழ் திரை உலகில் நயன்தாராவை போல் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்கொண்டிருப்பவர் திரிஷா. தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். சமீபத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்துள்ள குந்தவை நாச்சியார் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

பூஜா ஹெக்டே 

மும்பை வரவான இவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர் என்ற தகுதியுடன் கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கினின் முகமூடி என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் இளையதளபதி விஜயுடன் பீஸ்ட் படத்தில் இணைந்தார். இவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.

காஜல் அகர்வால் 

ஆந்திராவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் இவரும் தமிழ் திரை உலகிற்கு மும்பை வரவு தான். இவர் தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த முதல் படம் பழனி. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து தமிழில் நிலையான ஒரு இடத்தை பிடித்தார். நடிகர் விஜயுடன் துப்பாக்கி படத்தில் இணைந்தார். தற்போது இந்தியன்2 படித்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வாங்குகிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் காஜல் அகர்வாலின் மார்க்கெட் இறங்கவில்லை.

கீர்த்தி சுரேஷ் 

மலையாள வரவான இவர் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் பிரபல நடிகை மேனகாவின் மகள் ஆவார். பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்து பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்தது இவருக்கு பிளஸ் பாய்ண்ட் ஆக அமைந்தது. இவர் தற்போது ஒருபடத்திற்கு ரூ.3 கோடி வாங்குகிறார்.

சாய் பல்லவி 

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மருத்துவர். நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் தமிழ் திரை உலகில் கஸ்தூரி மான் என்ற படத்தில் கல்லூரி மாணவியாக அறிமுகம் ஆனார். கடந்த 2015ம் ஆண்டில் மலையாளத்தில் பிரமேம் என்ற படத்தில் இவர் மலர் டீச்சராக நடித்தது அனைவரையும் ஈர்த்தது. தமிழில் சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் வெற்றி படமாக அமைந்தது. இவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வாங்குகிறார்.

ஆண்ட்ரியா ஜெரோமியா 

தமிழகத்தின் அரக்கோணத்தில் பிறந்த இவர் ஆங்கிலோ இந்தியன் ஆவார். நடிகையாக மட்டும் இன்றி சிறந்த பின்னணி பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் என்ற திறமைகளும் இவருக்கு உண்டு. தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வாங்குகிறார்.

பிரியங்கா மோகன் 

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் என்ற மடத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி வாங்குகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...