அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனாவிற்கு பலியான மற்றொரு தமிழ் நடிகர்!

3 years ago 248

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. 

கொரோனாவால் தமிழ் திரையுலகில், இயக்குனர் கேவி ஆனந்த், தாமிரா, காமெடி நடிகர் மாறன், பாண்டு என அடுத்தடுத்த பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87 ' என்ற படத்தை தயாரித்தும் இயக்கியும் இருந்தவர் விஜய்ஸ்ரீ.  

இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த கலைச்செல்வன் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக விஜய்ஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...