அது போலி கணக்கு... சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா!

3 years ago 386

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா சமீபத்தில் சமந்தா போலவே காஸ்டியூம் அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

இந்த புகைப்படம் பவித்ராவின் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா நீங்கள் என்னை போலவே மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளார். 

இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது சமந்தாவுக்கு பவித்ரா பதிலளித்துள்ளார். 

உங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது எனக்கு மிகவும் பெருமை என்றும், ஆனால் நீங்கள் பாராட்டிய புகைப்படம் உள்ள கணக்கு என்னுடையது அல்ல என்றும் அது என்னுடைய பெயரில் இருக்கும் போலி கணக்கு என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இரண்டிலும் உங்கள் பாராட்டு எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் உங்கள் கனிவான பாராட்டுக்கு கோடான கோடி நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...