அந்த காரணத்திற்காக தல அஜித்தை மிரட்டிய நடிகர் பாலா! போட்டுடைத்த பிரபலம்.!

3 years ago 374

கோலிவுட்டில் நீண்ட ஆண்டுகளாக முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தல அஜித் குமார். இவர் தனது கடுமையான உழைப்பால் ஆரம்ப காலத்தில் இருந்து முன்னேறி வந்தவர். 

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் முதலில் தல அஜீத் தான் நடிக்க இருந்தார், என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 

இருப்பினும், இந்த படத்தில் அஜித் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை தற்போது பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, "அஜித்திடம் நிறைய கால் ஷீட்டுகள் கேட்டதாகவும், இந்தத் திரைப்படத்திற்காக அவரை அதிகமாக முடி வளர்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாகவும், பாலா ஒரு நாத்திகவாதி ஆனால் அஜித் ஒரு ஆன்மீகவாதி என்பதால் இந்த கதை பிடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன் இயக்குனர் பாலா தல அஜித்திடம் முழு கதையை கூறவில்லை. அடிக்கடி தனது திரைப்படங்களில் பாலா கதைகளை மாற்றுவது வழக்கம். 

இதனால்தான் அச்சமுற்ற தல அஜித் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அட்வான்ஸ் வாங்கிய பின்னர் பின் வாங்கியுள்ளார். 

ஆனால், பாலா முன் பணத்தை வாங்கிவிட்டு அஜித் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்." என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...