அந்த நடிகருக்கு 4ஆவது மனைவியாக தயார்! அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் நடிகை..

3 years ago 460

சினிமா பிரபலங்களை விட தற்போது பிக்பாஸ் பிரபலங்களின் மவுஸ் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் 50 நாட்கள் வீட்டில் இருந்தாலே போது மக்கள் மனதில் இடம்பிடித்து பேசப்படும் பிரபலங்களாகி விடுகிறார்கள்.

அப்படி ஒரு பிரபலம் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவருக்கு நான்காவது மனைவியாக சென்றாலும் எனக்கு சம்மதம் தான் என கூறியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் அந்த நடிகரை இப்படி சொல்லலாமா என்கிறார்கள்.

சமீபத்தில் தெலுங்கில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் தான் அஷு ரெட்டி.

பிக் பாஸுக்கு பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் மற்றும் பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்க நேரலையில் உரையாடினார்.

அதில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடிகர் பவன் கல்யானை சந்தித்து பேசியதாகவும், என்னுடைய கனவு பலிக்க அவர் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவியாக விருப்பமா? என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு நாசுக்காக பதில் சொல்லி அந்த கேள்வியை புறக்கணிக்காமல் எனக்கு விருப்பம் தான் என அஷு ரெட்டி கூறியுள்ளது தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு முன்னணி நடிகரின் பெயருக்கு இந்த வகையில் கலங்கம் ஏற்படுத்தலாமா என அடுக்கடுக்கான கேள்விகள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...