அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை

4 years ago 267

தமிழில் அதிக படங்களில் நடித்துள்ள ரெஜினா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“வித்தியாசமான கதை, கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். 

கவர்ச்சியாக எப்போது வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்தால்தான் பெயர் கிடைக்கும்.

கொஞ்ச காலத்துக்கு பிறகு ரெஜினா என்ற திறமையான நடிகை இருந்தார் என்று பேசும்படி இருக்க வேண்டும். 

இந்தி படத்தில் லெஸ்பியனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை.

கதை கேட்டதும் அதில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதில் நடித்த பிறகு சாவாலான கதாபாத்திரம் கொடுத்தால் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வந்துள்ளது. 

எனவே இனிமேல் கவர்ச்சியை தவிர்த்து வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...