அந்த மாதிரி வேடங்களில் நடிக்கவிரும்பும் அதிதி ராவ்..!

4 years ago 261

நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக காற்றுவெளியிடை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து செக்க சிவந்த வானம் சைக்கோ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  மேலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது, 

"நான் சினிமா முழுவதுமே இருக்க எனக்கு ஆசை இல்லை நான் திரையில் சில நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு அவரது வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களது மனதில் நெருடிக்கொண்டே இருக்கவேண்டும் நினைவு நாளும் நிற்கவேண்டும். எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்கும் இதற்கு ஹாலிவுட் நடிகைகள் தான் எனக்கு முன்னுதாரணம். 

மேலும் அவர்கள் விமர்சனங்களை கண்டுகொள்ளமாட்டார்கள்   நானும் அப்படி தான் என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் எப்படி விமர்சனம் செய்தாலும் அதற்காக வருத்தப்பட மாட்டேன் மனதில் வைத்துக் கொள்வேன். அதை நினைத்து கவலைப்பட மாட்டேன் என்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...