அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் போரடித்து விடுகிறது – ரம்யா கிருஷ்ணன்!

2 years ago 388

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் இருக்கும் ஆசை சினிமாவில் அதிக நாட்கள் பயணிக்க வேண்டும் அதே சமயம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற வேண்டுமென எதிர்பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன். தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.  இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இப்பொழுது ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் டாப் ஹீரோக்களின் படங்களில் சித்தி, வில்லி, அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் நடித்த பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவான லைகர் படத்தில் விஜய் தேவர் கொண்டாவுடன் கைகோர்த்து இவர் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இவர் கைகோர்ப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது பெரிய அளவில் உள்ளது.  

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நீலாம்பரி, சிவகாமி போன்ற கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடிப்பதால் தனக்கு போர் அடிக்கும் என கூறியுள்ளார்.

அதனால் சவாலாக இருக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம். மேலும் தமிழ், தெலுங்கு படங்களில் தான் நடிக்க அதிகம் விருப்பம் ஆனால் இந்தி படங்கள் நிறைய எனக்கு வந்தது அந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...