அந்த லெட்டர்.. பூரித்துப்போன வனிதா அக்கா.. வைரலாகும் டிவிட்!

3 years ago 321

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயக்குமார். விவாகரத்து, திருமணம், குடும்பத் தகராறு என பல பிரச்சனைகளில் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.

தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா டைட்டில் வின்னரானார். அதனை தொடர்ந்து யூட்யூப்பில் சமையல் நிகழ்ச்சிக்கான சேனலை தொடங்கினார். 

தொடர்ந்து விதவிதமாக சமையல் வீடியோக்களை வெளியிட்டு வரும் வனிதா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் வனிதா. அந்த வகையில் வனிதா தற்போது ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதாவது ஹரிதா என்று தீவிர ரசிகை ஒருவர் நடிகை வனிதாவுக்கு லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மிஸ் கார்ஜியஸ்.. டியர் வனிதா அக்கா.. நான் பார்த்ததிலேயே நீங்கள் ரொம்பவே ஸ்ட்ராங்கான மற்றும் அழகான ஆத்மா.. நான் எப்போதும் அட்மையர் பண்ணும் ஆத்மாவும் நீங்கள்தான்..

தொடர்ந்து செல்லுங்கள் என்பதைதான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.. இவ்வாறு அந்த ரசிகை பதிவிட்டுள்ளார். மேலும் கலர்ஃபுல்லாக ஒரு பெண்ணின் ஓவியத்தையும் வரைந்துள்ளார்.

இந்த கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, ஸ்வீட் கேர்ள் ஹரிதா எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் இதனை கொடுத்தார். என் நாளை சிறப்பாக்கி விட்டார்.. என பூரிப்புடன் பதிவிட்டுள்ளார் வனிதா விஜயக்குமார்.

அனல் காற்று, அழகானது காதல் 2கே, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி நாடாருடன் அழகானது காதல் 2கே படத்தில் வனிதா நடித்து வரும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...