அந்த விஷயத்தில் நயன்தாராவையே முந்திய ப்ரியா பவானி சங்கர்..

3 years ago 271

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். 

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வாணி போஜனை தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.


மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர்  கைவசம் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. 

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான கமல் உடன் இந்தியன் 2, மாபியா படத்தை தொடர்ந்து அருண் விஜய் உடன் ஒரு படம், ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது தெலுங்கிலும் கால் பாதித்துள்ள பிரியா பவானி சங்கர், அகம் பிரமாஸ்மி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இதனால் அம்மணி விரைவில் தென்னிந்திய அளவில் முன்னணி நாயகியாக வர வாய்ப்புள்ளது. 

நயன்தாராவைப் போலவே நடிகை பிரியா பவானி சங்கரும் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் தான். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் என்று கிளம்பிய வதந்தி தீயாய் பரவ, தன்னுடைய நிஜ காதலரான ராஜ்வேல் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

தற்போது ராஜ்வேல் உடன் காதல் மலர்ந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதால், 2011ம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தையும், தற்போதைய போட்டோவையும் இணைத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 

ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிடுவதில் முன்னணியில் இருக்கும் நயன் - விக்கி காதல் கூட 5 வருடம் தான் ஆகிறது. 

பிரியா பவானி சங்கர் - ராஜ்வேல் காதல் 10 ஆண்டுகளை கடந்துள்ளதால் நயனையே ஓவர் டேக் செய்த பெருமையுடன் ரசிகர்கள் வாழ்த்துக்களையும்  குவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...