அந்தமாதிரியான கேள்விக்கு பதிலடி கொடுத்த 21 வயதான நடிகை

3 years ago 472

சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நடந்துவருவதை தற்போது வெளியில் கூறி வருகிறார்கள். அதுவும் இணையதளத்தில் அவர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், எல்லமீறிய வார்த்தைகளால் நடிகைகளை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில், மலையாள சினிமாவில்19 வயதில் நடிகையாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா வாரியர். ஹிந்தியிலும் இவருக்கு கணிசமான படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் பிரியாவாரியர் நடிப்பில் தெலுங்கில் செக் என்ற படம் வெளியானது. முதலுக்கு மோசம் இல்லை என்ற அளவுக்கு ஓரளவு வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் மூலம் மேலும் சில தெலுங்கு பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாம்.

அதற்கு காரணம் கிளாமருக்கு எந்த குறையும் வைக்காமல் பிரியா வாரியர் தாராளம் காட்டி வருவது தான் என்கிறார்கள். நடிகை பிரியா தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் எல்லை மீறி ஆபாசமாக பேசிய ரசிகர் ஒருவரிடம் ‘ஏன் பேக் ஐடியில் வந்து பேசுகிறாய்? உனக்குத் தைரியம் இல்லையா?’ என அவர் பாணியிலேயே பதிலளித்துள்ளார்.

இப்படியாக பல நடிகைக்களுக்கு சமுகவலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் எல்லைமீறுவது வழக்கமாகி விட்டது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...