அனிருத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட நடிகர் கவின் படம்

6 months ago 73

சின்னத்திரை மூலம் தனது கெரியரை தொடங்கிய கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்த கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். 

அதற்கேற்றாற்போல் இவர் தேர்வு செய்யும் கதைகளும் சிறப்பாக உள்ளன. அந்த வகையில் தற்போது கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். 

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாம். 

தற்கு காரணம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தானாம். அதாவது அனிருத் இன்னும் படத்திற்கான பாடல்களை கொடுக்காமல் இழுத்தடித்து வருவதால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...