அப்பாவும், அம்மாவும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே... சுருதிஹாசன்

3 years ago 395

நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது:  “என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழப் பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

அவர்கள் எனக்கும், எனது தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான் அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கம். அம்மா நலமுடன் இருக்கிறார். எங்கள் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்து இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே ரொம்ப நல்லவர்கள்.

ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள்”. இவ்வாறு சுருதிஹாசன் கூறி உள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...