அம்மா ஆன பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி... என்ன குழந்தை தெரியுமா?

3 years ago 451

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். 

அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். 

அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மாவுக்கு பெரிய ரசிகர் படை உண்டு. இதில் ரோஷினி என்பவர் கண்ணம்மாவாக நடித்து கலக்கி வந்தார். இவர் சீரியலில் இருந்து திடீரென வெள்ளித்திரை நோக்கி போவதற்காக விலகிவிட்டார். 

இதனால் அவரைப் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரை கண்ணம்மா கேரக்டருக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாக நடித்தவர் தான் வெண்பா. இவரது நிஜப்பெயர் ப்ரீனா. இவரது கேரக்டர் இந்த சீரியலில் செம ஹிட். எப்போதுமே ப்ரீனா ஆசாத் சோசியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருப்பார். 

சிலவாரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இப்போது அம்மணி தனக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதற்கு ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துச் சொல்லிவருகின்றனர்.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...