அரவிந்த் சாமியின் மகன், மகள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

2 years ago 267

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பின்னர் ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய புகழ் பெற்றார்.


இடையில் சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகி  ’தனி ஒருவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். அரவிந்த் சாமி நடிப்பில் ’நரகாசுரன்’ ’கள்ளபார்ட்’ ’சதுரங்க வேட்டை 2’ ‘வணங்காமுடி’ ஆகிய படங்கள் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.


நடிகர் அரவிந்த்சாமி கடந்த 1994ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 

அரவிந்த்சாமி தனது மனைவியை கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா சமையல் கலை வல்லுனராகி மிகப்பெரிய செஃப் ஆக உள்ளார். அதேபோல் அரவிந்த்சாமி மகன் ருத்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ’ஐபி என்ற இண்டர்நேஷனல் பேக்கலரேட் படிப்பை முடித்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அரவிந்த்சாமியின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...