அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்

3 years ago 414

கொரோனாவால் திரையுலக பிரபலங்களின் உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனாவால் உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’, தளபதி விஜய் நடித்த ’பைரவா’ உள்பட ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதிய அருண்ராஜா காமராஜ், கடந்த 2018 ஆம் ஆண்டு ’கனா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். 

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ’ஆர்டிகிள் 15’ என்ற திரைப்படத்தின் ரீமேக் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இதில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா இரண்டாவது அலையில் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிலர் உயிரிழந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் சிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில்  காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...