அர்ச்சனா மீது கோபத்தில் செந்தில்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

2 years ago 695

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வசமாகச் சிக்கியதால் பின்புறத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் அர்ச்சனாவை திட்டித் தீர்க்கிறார் செந்தில். அவர் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக நீ எவ்வளவு தப்பு அதை மறைக்க எவ்வளவு பொய்.. என் அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்ப பார்த்து இருக்க. எதுவுமே தெரியாத மாதிரி ஸ்டேஷன்ல என்னமா நாடகம் போட்ட என திட்டுவது மட்டுமல்லாமல் கன்னத்தில் அறை விடுகிறார்.

அதன் பிறகு இந்த வயிற்றில் வளர்வது யாருடைய குழந்தை என் குழந்தை, என் வாரிசு அதைப்போய் அழிக்க பார்த்து இருக்கியே. நீ எல்லாம் என்ன பொம்பள, நீ செஞ்ச தப்புக்கு எல்லாம் உன் குடும்பமும் உடந்தை, கேடு கெட்ட குடும்பம். உன்ன பொண்ணு பாக்க வந்து என் தலையில கட்டி வைச்சு என் வாழ்க்கையே நாசமாப் போய்டுச்சே என அழுகிறார். இந்த குழந்தை பிறக்கிற வரிகள்தான் நீ இந்த வீட்டில இருக்கணும் குழந்தை பிறந்ததும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது, இனிமே உன்னோட என்னால சேர்ந்து வாழ முடியாது என செந்தில் கூறுகிறார்.

இந்தப் பக்கம் மொட்டை மாடியில் சிவகாமியும் அவருடைய கணவரும் அர்ச்சனா செய்த வேலைகளை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் மறந்து விடு என சிவகாமியின் கணவர் சொல்ல எதை மறக்க என அர்ச்சனா செய்த ஒவ்வொரு வேலையும் சொல்லி காட்டுகிறார். சரவணனுக்கு சந்தியா சரியான பொண்ணு இல்ல நம்ம குடும்பத்துக்கு ஏற்ற வழி இல்லைன்னு நான் நெனச்சேன் ஆனா அவதான் விட்டுக்கொடுத்து போறவலா இருக்கா. எனக்கு இப்போது சரவணன் வாழ்க்கை பற்றிய பயம் கொஞ்சம் கூட இல்ல. ஆனா செந்திலுடன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு என சொல்கிறார்.

அதன்பிறகு சரவணன் சந்தியாவும் நின்று அர்ச்சனா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். எல்லா விஷயமும் தெரிந்து எப்படி யார்கிட்டயும் சொல்லாமல் இருந்தீங்க சரவணன் கேட்க நான் அதிர்ச்சியில் இருந்தேன் யாரிடம் எதை எப்படி சொல்வது இதனால் வீட்டில் என்ன பிரச்சனை வரும் என பல யோசனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் அந்த போலீஸ் வந்து எல்லா உண்மையையும் போட்டு உடைக்க அத்தையும் புரிஞ்சு கிட்டாங்க. ஆனாலும் செந்தில் இப்படி அர்ச்சனாவை வெளியே தள்ளி இருக்க கூடாது. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்து இருக்கணும் என சொல்கிறார். 

இங்க செந்திலிடம் இப்படி அர்ச்சனா மேல கோவமா இருக்க வேண்டாம் னு சொல்லுங்க. அவ வயித்துல குழந்தை வளர்வது இப்படி அவர் கோபமாக இருக்கிறது அங்கு ரெண்டு பேருக்கும் நல்லது இல்லை, நீங்க செந்திலிடம் பேசுங்க என சந்தியா சொல்ல சரவணனுக்கு நான் பேசுகிறேன் என கூறுகிறார். மேலும் அவங்க குற்றாலத்தில் இருக்காங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும் என சந்தியா கேட்க என்னடா இது பற்றி யாரும் கேட்கலை என்று நினைத்தேன் நீங்க கேட்டுட்டீங்க. ரெண்டு பேரும் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருக்காங்க அது விபச்சாரம் நடக்கிற இடம். இவங்களையும் போலீஸ் விபச்சார கேஸ்ல கைது பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.

ஸ்டேஷனுக்குப் போய் பார்த்தா செந்தில் பனியனோடு நிற்க அர்ச்சனா போட்டிருந்த டிரஸ் பார்க்கவே கண்றாவியா இருந்தது. அதன்பிறகு போலீசிடம் ஆதாரங்களை காட்டி அவங்களை கூட்டிட்டு வந்தேன் என கூறுகிறார். அப்பா எவ்வளவு சிக்கல் என சந்தியா அதிர்ச்சி அடைகிறார்.

அதன்பிறகு சரவணன் செந்திலை பார்த்து நடந்தது எல்லாம் மறந்திடு அர்ச்சனாவிடம் பழையபடி சந்தோஷமா பேசிக்கிட்டு இரு என அறிவுரை வழங்குகிறார். என்னால அப்படி இருக்க முடியல அவளைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் தான் வருது இனி அவனோடு சேர்ந்து வாழ முடியாது என செந்தில் சொல்கிறார். இப்படியெல்லாம் முடிவு பண்ணாத அவ வயித்துல வளருது உன்னோட குழந்தை நம்ம குடும்பத்தோட முதல் வாரிசு அவளை விட்டுக் கொடுக்காம பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை என சொல்கிறார். 

அர்ச்சனா ஒரு பொண்ணா தப்பு பண்ணி இருக்கலாம் அம்மாவா தப்பு பண்ண மாட்டானு நினைக்கிறேன் சரவணன் சொல்ல அத்தனை செய்த தப்பை எல்லாம் மன்னிச்சிடு என்னையும் மன்னிக்கச் சொல்லி என்கிட்ட வந்து பேசறியே உன் மனசு யாருக்கும் வராது என கூறி அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார் செந்தில். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...