அறிகுறியே தெரியல..ரொம்ப பயமா இருக்கு.. பிரபல தொகுப்பாளினிக்கு கொரோனா..!

3 years ago 768

பிரபல தொகுப்பாளராக வலம் வரும் தொகுப்பாளினி அஞ்சனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. 

கடந்த வாரம் சாதாரண சோர்வாகதான் இருந்தது. ஒரு காய்ச்சல் வந்த பின், இரண்டு முறை ரேபிட் டெஸ்ட் செய்தேன். அந்த இரண்டு முறையும் ரிசல்ட் நெகட்டிவ் என்றே வந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்சிபிசிஆர் சோதனை செய்தேன். 

அதில் ரிசல்ட் பாசிடிவ் என வந்தது. கிட்டத்தட்ட தொற்றுக்கான அறிகுறிகளை காட்ட 3 லிருந்து 14 நாட்கள் எடுத்துக்கொண்டது. அதனால் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை கவனித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

தற்போது பரவும் வேரியண்ட் ரேபிட் டெஸ்டில் பெரிதாக தெரிவதில்லை. இந்த வைரஸ் இந்த சமயம் பயமுறுத்தும் விதமாக பரவுகிறது. நான் என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன்.” என்று பதிவிட்டுள்ளார். 

சன் மியூஸிக் சேனலில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் அஞ்சனா. பல ஆண்டுகள் சன் மியூஸிக்கில் விஜேவாக பணிபுரிந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

இவர் ஏகப்பட்ட இசை வெளியிட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான விழாக்கள் உட்பட கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர். பின்னர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. 

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சமூக வலைதளங்களில் அஞ்சனா ரங்கன் பிரபலம் என்பதால் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களின் கருத்துக்கள் அனல் பறக்கும். 

அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் உரையாடுவார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...