அவருக்கு நான் அம்மா மாதிரி.... தொடரும் ராஷ்மிகாவின் சர்ச்சை பேச்சு

2 years ago 323

பட விழாக்களில் ராஷ்மிகா மந்தனா பேசுவது அடுத்தடுத்து சர்ச்சையாகி வருகிறது. இதனால் ராஷ்மிகாவின் மீது திரையுலகினர் அதிருப்தியில் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா நாயகியாக அறிமுகமானார். ராக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். 

தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து மேலும் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. 

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்து தமிழிலும் அறிமுகமாக, இப்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ராஷ்மிகா தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து கன்னட திரையுலகை இழிவுப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த ராஷ்மிகா, தான் அறிமுகமான முதல் கன்னட படத்தை தயாரித்தது யார் என தெரியாது என கூறியதாக சொல்லப்படுகிறது. 

மேலும், ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியாகி ஹிட் அடித்த காந்தாரா படத்தை பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரின் படத்தையே பார்க்காமல் இப்படி பெருமை பேசலாமா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இதனால் கன்னட திரையுலகில் அவருக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் மிஷன் மஜ்னு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, தென்னிந்திய திரைப்படங்களில் மெலடி பாடல்களே வருவதில்லை. எல்லாம் ஐட்டம் நம்பர் டான்ஸ் பாடல்கள் வருவதாக ரொம்ப சலித்துக் கொண்டு கூறியிருந்தார். 

ராஷ்மிகாவின் இந்த கருத்தும் ரசிகர்களை ரொம்பவே சூடாக்கியிருந்தது. இந்நிலையில், கிரிக் பார்ட்டி திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் ரிஷப் ஷெட்டி ட்வீட் செய்துள்ளார். 

அதில் 'கிரிக் பார்ட்டி' 6 வருடங்கள் ஆன பிறகும், உங்கள் சத்தமும், சலசலப்பும், விசில் சத்தமும் உற்சாகம் தருகிறது இதனை வெற்றியாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி என ட்வீட் செய்துள்ளார். 

ஆனால் இதில் நாயகி ராஷ்மிகாவின் பெயரை பதிவுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா அழகான இதயம் கொண்டவர். அவரை நான் எப்போதும் பாதுகாக்க விரும்புகிறேன். அவரது விஷயத்தில் நான் ஒரு possessive அம்மாவை போன்று தான் இருப்பேன். 

அவருக்கு myositis என்று நோய் இருப்பது தெரியும். ஒருவரை நமக்கு பிடித்துவிட்டால், அவர் கண்டிப்பாக எல்லாவற்றிலும் வெற்றிபெற வேண்டும் என நினைப்போம். சமந்தா விஷயத்தில் நானும் அப்படி தான் நினைக்கிறேன். 

அவர் மீது நான் அதிகம் possessive ஆக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதில் சமந்தா மீது ராஷ்மிகாவுக்கு ஏன் இவ்வள்வு possessive இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...