ஆக்‌ஷன் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

3 years ago 338

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திட்டம் 2, பூமிகா ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இவர் அடுத்ததாக கிரைம் படங்களுக்கு பெயர் பெற்ற ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறார். இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருள் குமார் கூறும்போது, ‘இது ஒரு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, அர்ஜூன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும். 

இயக்குனர் தினேஷ் லட்சுமணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். 

நடிகர் அர்ஜூன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்’ என்றார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...