ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரர் – பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்த சோனுசூட்

3 years ago 185

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர், தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும், தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். 

ரெய்னாவின் இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சோனு சூட், பத்தே நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்சிஜன் சென்று சேரும் என பதிலளித்திருந்தார்.

அதேபோல் சொன்னபடி சுரேஷ் ரெய்னாவின் அத்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்துள்ளார் சோனுசூட். இதனையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு, சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என ஏராளமானோருக்கு சோனு சூட் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...