ஆபத்தான நிலையில் யாஷிகா...3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ்...ட்விட்டரில் உருகும் எஸ்.ஜே.சூர்யா

3 years ago 477

நேற்று இரவு மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது 2 நண்பர்கள் ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் யாஷிகாவுடன் வந்த அவரது நெருங்கிய தோழியான வாலிஷெட்டி பவானி, விபத்தில் உயிரிழந்தார். அதிகாலையில் வெளியான இந்த தகவல் கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

யாஷிகாவின் தந்தை தற்போது டெல்லியில் உள்ளார். அவரை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்ட போது, என் மகள் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக மருத்துவமனையில் இருந்து ஃபோன் செய்தார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதே சமயம் யாஷிகா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓவர் ஸ்பீடில் காரை ஓட்டியது, அலட்சியத்தால் ஒருவர் உயிரிழக்கு காரணமாக இருந்தது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விபத்தின் போது யாஷிகா தான் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குடிபோதையில் காரை ஓட்டினாரா, இரவு நேரத்தில் நண்பர்களுடன் எங்கு சென்றார், என்ன நடந்தது என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சினிமாவில் இதுவரை சிறிய ரோல்களில் நடத்து வந்த யாஷிகா தற்போது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அத்துடன் பிஸியான மாடலான இவர் அளவில்லாமல் கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி அந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.

யாஷிகா விபத்தில் காயமடைந்த தகவல் அறிந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா அழகான பெண் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நல்ல நடிகரும் கூட என்பது எங்களுக்கு தான் தெரியும். கடமையை செய் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு சரியான ஆரம்பமாக இருக்கும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...