“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்தது ஒரு பிரபலம் தானாம்.! யார் அது தெரியுமா.?

3 years ago 284

ஆரம்பத்தில் காதல் படங்களை எடுத்து வெற்றி கொண்டு வந்த செல்வராகவன் திடீரென திரில்லர் படத்தை எடுத்து அசத்தினார். ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றி பெறுமா பெறாத என்பது மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தது.  

காதல் படத்தை எடுத்து வந்த ஒரு இயக்குனர் திடீரென இந்த திரைப்படத்தை எடுத்ததால் இந்த படத்திற்கான வரவேற்பு முதலில் அதிகம் இல்லை சொல்ல போனால் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

ஆனால் தற்போது இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக இருக்கும்.

மேலும் அடுத்து அடுத்து என்ன நடக்கப் போகும் என்பதை நொடிக்கு நொடி காட்டியிருப்பார். அந்த அளவிற்கு இந்த படம் சூப்பராக இருந்தது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்கள்.  

அப்பொழுது வெற்றி பெறவில்லை என்றாலும் தற்பொழுது இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என பலரும் தற்போதும் செல்வராகவனை டார்ச்சர் செய்து வந்து கொண்டுதான் வந்தனர். ஒருவழியாக அவரும் அதற்கு முடிவு கட்டிவிட்டார்.

தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் ரீமாசென் நடித்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளதுஃ

அவர் வேறு யாருமல்ல தனுஷின் மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் தானம் ரீமா சென்னுக்கு குரல் கொடுத்தது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...