ஆர்யாவின் அம்மாவாக நடித்தவரா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகனா?

2 years ago 637

ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகப் பெரும் வெற்றிபெற்ற படம் தான் சர்பட்டா பரம்பரை. இயக்குனர் ரஞ்சித் இயக்கி ஆர்யா நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து வந்த இந்தப்படம் ஆர்யாவைத் தாண்டி குத்துச்சண்டையில் டேன்சிங் ரோஷாக வந்த நடிகர் ஷபீர், டாடி ரோல் செய்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி என பலருக்கும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 

இந்தப்படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்னும் கேரக்டரில் நடித்த துஷ்ரா விஜயனின்நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப்படத்தில் ஆர்யாவின் அம்மா கேரக்டரில் நடித்தவர் தான் அனுபமா குமார்.

இவர் நடிகை மட்டுமல்ல. செய்தியாளர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். அனுபமா குமார் இதுவரை 300க்கும் அதிகமான படங்கள், டிவி நிகழ்வுகள், விளம்பரங்களிலும் தலைகாட்டியுள்ளார். 

இயக்குனர் சேரனின் பொக்கிஷத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து ஆடுபுலி, முகமூடி, துப்பாக்கி, நீர் பறவை,, கெளரவம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருந்தார்.

இவரது கணவர் சிவகுமார் ஆவார். இந்தத் தம்பதிக்கு, ஆதித்யா என்ற மகனும் உள்ளார். இப்போது முதன்முறையாக நடிகை அனுபமா குமார் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் நச்சுன்னு ஹீரோ போல் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...