ஆர்யாவின் கட்டுமஸ்தான உடம்பை பார்த்து வாயடைத்துப் போன மாமியார்

3 years ago 394

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்களின் படங்களை தற்போது கைப்பற்றி இயக்கி வருகிறார் பா.ரஞ்சித்.

இவர் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தற்போது ஆர்யாவின் 30-வது திரைப்படமான சார்பாட்டா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


இந்தத் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது பட்டி தொட்டி எங்கும் அவரது திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஜான் கொக்கேன், சந்தோஷ், பசுபதி, கலையரசன், காளி வெங்கட் போன்ற பலரும் இந்த திரைப்படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கின்றனர்.

படம் நிச்சயம் பா. ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்யாவின் புகைப்படத்தை பார்த்த அவரது மாமியார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதைப்பற்றி பதிவை ஒன்றை குறிப்பிட்டு உள்ளார்.

அவர் கூறியது : ஆர்யாவின் ஒர்க்கவுட் படத்தை வெளியிட்டு அர்ப்பணிப்பு விடா முயற்சி புத்திசாலிதனம் அதனுடைய உச்சம் இது நீங்கள் எங்களை பெருமை அடைய செய்து உள்ளீர்கள் மேலும் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளீர்கள் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆர்யா நன்றி அம்மா என குறிப்பிட்டார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...