ஆர்யாவும் அவரது தாயும் இளம்பெண்ணை ஏமாற்றினார்களா? ஷாக்காகும் சாயிஷா!

3 years ago 524

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இடத்தினை பல ஆண்டுகளாக பிடிக்க முயற்சி செய்து வருபவர்கள் வரிசை அதிகரித்து வருகிறது. அந்தவரிசையில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறார் நடிகர் ஆர்யா.

முன்னணி இயக்குநர்கள் படத்தில் நல்ல ரோலில் நடித்திருந்தாலும் வயதான பின் தன்னுடன் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயது வித்யாசம் இருந்தாலும் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் வலுப்பெற்று தான் வருகிறது.

தற்போது ஆர்யா - சாயிஷாவை பிரிக்கும் விதமாக இளம்பெண் புகாரளித்துள்ளது சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற இளம்பெண்ணிடம் 80 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டாராம். பணத்தை திருப்பி கேட்டதற்கு ஆர்யாவின் தாயார் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பெண் சும்மா ஒன்றும் புகார் செய்யவில்லை. அதற்கான ஆதாரங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து கொண்டு ஆர்யாவின் தாயாரும் அந்த பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்த புகாரில் இந்த ஆவணங்களையும் இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...