ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்.. ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா?

3 years ago 490

பிரபல சீரியல் நட்சத்திரமான ஆல்யா மானசா 2வது முறையாக கர்ப்பம் அடைந்திருப்பதாக அவருடைய கணவர் சஞ்சீவ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்தவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

ராஜா ராணி சீரியல் முடிந்தாலும் இந்த ஜோடி மீண்டும் இன்னொரு சீரியலில் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால், அந்த சீரியல் முடிவுக்கு வரும் நேரத்தில் ஆல்யா கர்ப்பம் அடைந்தார். 

இதனால் சின்னத்திரைக்கு பிரேக் விட்டு வீட்டில் பத்திரமாக இருந்த ஆல்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆல்யாவும், சஞ்சீவும் ‘ஐலா’ என பெயரிட்டனர்.

பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய ஆல்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். அவரின் டிரேட் மார்க் சீரியலான ‘ராஜா ராணி’ சீரியலின் 2வது பாகத்திலும் அவரே ஹீரோயினாக நடித்து வருகிறார். 

ஹீரோவாக சித்து நடிக்கிறார். கணவர் சஞ்சீவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்ததுபோலவே, சித்துவுடனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தொடக்கத்தில் இந்த சீரியல் மெதுவாக சென்றாலும், இப்போது பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, சித்துவுடனான ரொமான்ஸ் காட்சிகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கிசுகிசு கன்டென்ட் எழுதுபவர்களுக்கு ஆல்யா மற்றும் சித்துவின் ரொமான்ஸ் காட்சிகள் மிகப்பெரிய கன்டென்டு களமாக இருந்து வருகிறது.

சித்துவுடன் நெருக்கமாக நடிப்பதால், ஆல்யா மீது சஞ்சீவ் செம காண்டில் இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. ஆனால், ஆல்யா - சஞ்சீவின் சமூகவலைதள பக்கங்களை தொடர்ந்து பார்த்தால், அவர்கள் இருவரும் எவ்வளவு ஹேப்பியாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். 

ஆல்யாவின் சூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று, கிடைக்கும் ப்ரீ டைம்களில் விளையாடிக் கொண்டிருகிறார் சஞ்சீவ். அடிக்கடி பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சஞ்சீவ் லேட்டஸ்டாக ஆல்யா குறித்த அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். 


அதில், ஆல்யா 2வது முறையாக தாய்மை அடைந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில், விரைவில் ஐலா 2 வரவேண்டாமா? நன்றாக சாப்பிடு என ஆல்யாவுக்கு அறிவுரை வழங்கினார்.


அப்போதே ரசிகர்கள் யூகிக்க தொடங்கினார். அதற்கு இப்போது பதில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சஞ்சீவ். மேலும், சஞ்சீவ் - ஆல்யா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...