இணையத்தை கலக்கும் ரைசாவின் பிகினி போட்டோஸ் !

4 years ago 321

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன்.விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் ஒன்றான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று தமிழக மக்களின் மனம் கவர்ந்த பிரபலமாக மாறினார்.

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ரைசா.இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் இலன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் தயாரான  பியார் ப்ரேமா காதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.இந்த காலத்து லிவ்வின் கலாச்சாரத்தை பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த இந்த முதல் படம் அவருக்கு லாபகரமான ஒரு படமாகவும் அமைந்தது.இந்த படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்திருந்தன.

இந்த படத்தின் மூலம் ரைசா தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் FIR,ஜீ.வி.பிரகாஷின் காதலிக்க யாருமில்லை,ஆலிஸ் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது மாலத்தீவிற்கு ட்ரிப் சென்றுள்ள அங்கிருந்து தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...