இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள்..!

4 years ago 888

மலையாளத்தில் பெயர் போன நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான். இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். வெறும் 38 வயதுடைய இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை தன் கைப்பிடியில் வைத்துள்ளார்.


தமிழில் நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன், மெர்குரி பூக்கள், சண்டக்கோழி, கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, புதிய கீதை, பாலா, ரன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 

அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது மீராஜாஸ்மின் தான். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறனை மலையாளத்தில் நிலைநாட்டியுள்ளார். இதன் மூலமாக மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டுவிட்டார். 


 மேலும் மலையாளத்தில் பல சிறந்த திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தேசிய விருதையும் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின் அதன் பிறகாக சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். 

இந்நிலையில், முண்டா பனியன், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...