இந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென தெரியுமா?

3 years ago 655

திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய குழந்தை கால புகைப்படங்களையும் பள்ளிகால புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்திக் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் தான் கைக்குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை தற்போது பதிவு செய்துள்ளார்.

சூர்யாவின் ’என்ஜிகே’ மற்றும் கார்த்தியின் ’தேவ்’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு திரையுலகிலும் நடித்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங் தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார்


அதில் தான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய தாயார் தூக்கி கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தன்னுடைய தாயாருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரிடம் இருந்து பிறரிடம் அன்பு செலுத்துவது எப்படி? சுயநலம் இல்லாமல் வாழ்வது எப்படி? உள்ளிட்ட பலவற்றை தான் கற்றுக் கொண்டதாகவும் அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத்திசிங் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ‘கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, உள்பட 8 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...