இந்த போட்டோவை யார் எடுத்தாங்க தெரியுமா? மனந்திறந்தார் ஷிவானி நாராயணன்

3 years ago 391

 ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

 சீரியல் நடிகையாக அறிமுகமாகி தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன். 

பிக்பாஸ் 4-வது சீசனில் இறுதிவாரம் வரை இருந்து சிங்கப் பெண்ணாக வெளியேறினார் ஷிவானி.


 பிக்பாஸில் பாலாஜியுடன் மட்டுமே அதிகம் நட்பு பாராட்டி வந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் ரம்யா பாண்டியனின் நெருங்கிய தோழியானார் ஷிவானி. 

 பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வழக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள் தவறாமல் தனது புதிய புகைப்படங்களை ஷிவானி பதிவேற்றி வருகிறார். இன்ஸ்டாவில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். 


 இந்நிலையில் ரம்யா பாண்டியன் இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக தலைப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் ஷிவானி. 

 ஷிவானியின் பதிவைப்பார்த்த ரம்யா பாண்டியன் கமெண்டில், என்ன ஒரு புத்திசாலித்தனமான போட்டோகிராபர் என தனக்குத் தானே புகழ்ந்து கொண்டார். 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...