இந்த வயசுல இப்படியா? வைரலாகும் நடிகை நதியாவின் யோகா வீடியோ!

3 years ago 576

கடந்த 80கள், 90க்ளில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நதியாவுக்கு தற்போது 54 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் மிக நேர்த்தியாக யோகா செய்ததன் காரணமாகவே அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார் என்று நெட்டிசன் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

இந்த வீடியோவுக்கு நடிகை நதியா, ‘யோகா நம்மை மன அழுத்தத்தில் இருக்கும் மீட்கும்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நதியா தற்போது ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பில் கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார்.

வெங்கடேஷ், மீனா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை நதியா இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...