இனி வில்லன் தான்... மிரட்டும் விஜய் சேதுபதி... நடுங்கும் ஹீரோக்கள்!

3 years ago 906

மாஸ்டர் படத்தை பார்த்தவர்கள் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதியை அதிகம் கொண்டாடியதை யாராலும் மறக்க முடியாது. 

மாஸ்டரை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பேனா படத்திலும் வில்லனாக ஸ்கோர் செய்திருந்தார்.

இந்நிலையில் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்களாம். 

கோபிசந்த் சொன்ன கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துவிட்டதாம். அதனால் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலகிருஷ்ணா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் அறிந்த சினிமா ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

தளபதி விஜய்யையே ஈஸியாக ஓவர்டேக் செய்த மனுஷனுக்கு பாலகிருஷ்ணாலாம் எம்மாத்திரம் என்கிறார்கள்.

பாலகிருஷ்ணாவுக்கு நேரம் சரியில்லை, அதனால் தான் வில்லன் என்கிற பெயரில் விஜய் சேதுபதி வடிவில் அவருக்கு பிரச்சனை வரப் போகிறது. விஜய் சேதுபதி சும்மா கெத்தாக நடித்து கைதட்டல் வாங்கப் போகிறார்.

விஜய் சேதுபதி கையால் தன் தலையில் மண்ணை அள்ளிப் போடப் போகிறார் பாலகிருஷ்ணா என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. 


இது தவிர்த்து தி ஃபேமிலி மேன் 2 தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் இந்தி வெப்தொடரில் ஷாஹித் கபூருக்கு வில்லனே விஜய் சேதுபதி தான்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...