இயக்குனருக்கு போன்... தல 61 கூட்டணியை உறுதி செய்தார் அஜித்!

3 years ago 309

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமையை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அவரது 61 திரைப்படத்தை யார் இயக்குவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே தல அஜித்தின் 61-வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால்  தற்போது அது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 

நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்மையில் வினோத்திற்கு குழந்தை பிறந்ததற்காக அஜித் போன் செய்து பாராட்டிவிட்டு எனது 61 வது நீங்களே இயக்குங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...