இயக்குனர்கள் படுத்தும் பாட்டால் தலை தெறிக்க ஓடும் நாயகிகள்!

2 years ago 295

நடிகைகள் பலருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அதனாலேயே மற்ற மொழியில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் வந்த பூஜா ஹெட்டேவுக்கு பீஸ்ட் திரைப்படம் பலத்த அடியை கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த அந்த திரைப்படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. 

ஏற்கனவே பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது ஒர்க் அவுட் ஆகாமல் போனதால்தான் அவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாக இருந்த அவர் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வந்தார். 


எப்படியும் இங்கு நம்பர் ஒன் இடம் கிடைக்கும் என்று நம்பிய அவருக்கு நெல்சன் பெரிய துண்டை தலையில் போட்டு அனுப்பி வைத்து விட்டார்.

இதனால் அவர் இனிமேல் தமிழ் பக்கமே வரக்கூடாது என்னும் முடிவில் இருக்கிறார். தற்போது அவரைத் தொடர்ந்து அதே போன்ற நிலைமையில் தான் நடிகை கீர்த்தி செட்டியும் இருக்கிறார். 

தெலுங்கில் இளம் நாயகியாக முன்னணியில் இருக்கும் இவர் சூர்யாவின் வணங்கான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால் அவரின் போதாத நேரம் இந்த படம் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கிறது.

சொந்த வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருந்த பாலாவை சூர்யா தான் மீண்டும் படம் இயக்க அழைத்து வந்தார். ஆனால் அவரிடமே பாலா தன் வேலையை காட்டிவிட்டார். 


இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மூன்றே மாதத்தில் முடிய வேண்டிய அந்த படத்தின் சூட்டிங் இப்போது வரை முடியாமல் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவருடைய டார்ச்சரும் படப்பிடிப்பில் எக்கச்சக்கமாக இருந்ததால் கீர்த்தி செட்டி தற்போது தமிழ் திரையுலகையே வெறுக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார். 

கொடுத்த நாட்களுக்கு மேல் அதிக கால்ஷூட் வீணாகிப் போனதும் அதற்கு ஒரு காரணம். இதனால் அவர் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இனி இந்த பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...