இயற்கை 2-ம் பாகம் உருவாக இருந்தது... ஷியாம் வெளியிட்ட தகவல்

3 years ago 301

ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். 

இதைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கினார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி முடித்த எஸ்.பி.ஜனநாதன், கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் பிறந்தநாளான இன்று, நடிகர் ஷியாம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, லாபம் படத்தை முடித்த பின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம்.

மேலும் அப்படத்தை நார்வே அல்லது பிஜி நாட்டில் படமாக்க அவர் தன்னிடம் ஆலோசித்து வந்ததாகவும் ஷியாம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

எஸ்.பி.ஜனநாதனின் மறைவால் அப்படம் கைகூடாமல் போய்விட்டதாக ஷியாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...