இரட்டை வேடத்தில் முதன் முறையாக நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி?

3 years ago 244

இசை அமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...