இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த பிரபல நடிகர்

3 years ago 349

தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் முகேஷ்.

இவர் மலையாளத்தில் தான் 260க்கும் அதிகமான படங்கள் நடித்திருக்கிறார். முகேஷ் நடிகை சரிதாவை 1988ம் ஆண்டு திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

முகேஷ் ஒரு குடிகாரர் என்றும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று சரிதா அப்போது கூறியிருந்தார். அதன்பின் முகேஷ் 2வதாக நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது என்னவென்றால் தேவிகா தனது வக்கீல் மூலம் முகேஷுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தேவிகா கூறுகையில், முகேஷ் நல்ல கணவர் இல்லை, 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை, விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...